திருவண்ணாமலை செங்கம் சாலை ரமணாஸ்ரம் அருகே உள்ள காரியாகுளம் கரும காரியம் மண்டபம் உள்ளது. இந்த மண்டபம் அருகே நடைபாதை வியாபாரிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கர்ம காரியம் செய்ய வரும் பொதுமக்கள் உள்ளே செல்ல வழியின்றி மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் நடைபாதை கடைக்கு வரும் வாடிக்கையாளர்களால் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனத்தை நிறுத்துவதால் அந்தப் பகுதியில் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. எனவே நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர் மற்றும் பொதுமக்கள் சார்பாக கோரிக்கை விடுக்கின்றனர்.