திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் ஆடி பூரம் திருவிழா கடந்த ஒரு வார காலமாக கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில் ஐந்தாம் நாளான இன்று இரவு பராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.