திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு இருப்பதாக கிடைத்த தகவலின் பெயரில் மாவட்ட நிபுணர் குழு விரைந்து வந்து சோதனையில் ஈடுபட்டு வருகிறார். இதனால் செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் அரசு அலுவலர்கள் அச்சத்துடன் உள்ளனர். மேலும் இதுகுறித்து நிபுணர் குழு ஆய்வு குழு மோப்ப நாயுடன் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் செங்கம் பகுதி பரபரப்பாக உள்ளது.