வரி பாக்கியை செலுத்தினால் ஊக்கத்தொகை

84பார்த்தது
வரி பாக்கியை செலுத்தினால் ஊக்கத்தொகை
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பேரூராட்சியில் வரும் 30-ம் தேதிக்குள் வரியை செலுத்தினால் ஊக்கத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சேத்துப்பட்டு சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் சுதா மற்றும் செயல் அலுவலர் சரவணன் ஆகியோர் கூறியுள்ளதாவது:

சேத்துப்பட்டு பேரூராட்சியின் வளர்ச்சிக்கு மக்களின் வரிப்பணம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் மூலம் அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, சாலை வசதி, கழிவுநீர் கால்வாய், மின்விளக்கு உள்ளிட்ட வசதிகள் மற்றும் பொது சுகாதாரப் பணிகள் செய்யப்பட்டு வருகின்றது. பொதுமக்கள் பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி தொழில்வரி மற்றும் குடிநீர் கட்டணம் உள்ளிட்ட வரியைகளை வரும் 30ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் அவ்வாறு வரி செலுத்துபவர்களுக்கு ஐந்து சதவீதம் ஊக்கத்தொகை கிடைக்கும்.

அதன்படி அதிகபட்சமாக ரூபாய் 5000 வரை ஊக்கத்தொகை வழங்கப்படும். அதே நேரத்தில் வரும் காலங்களில் வரி செலுத்த தவறுபவர்களுக்கு கூடுதலாக மாதந்தோறும் ஒரு சதவீத வரி அதிகரிக்கப்படும். எனவே வரியை நிலுவையின்றி செலுத்த வேண்டும் இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி