ரஜினிகாந்தி நடிப்பில் நெல்சன் இயகத்தில் 2023ம் ஆண்டு ஜெயிலர் திரைப்படம் வெளியானது. அனிருத் இசையமத்தை இத்திரைப்படம் ரூ. 600 கோடிக்குமேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. 'ஜெயிலர் 2' என பெயரிடப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது. முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிந்த நிலையில், கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடியில் நடைபெறும் 2ஆம் கட்ட படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டுள்ளார்.