அஜித் குமார் நடித்த 'குட் பேட் அக்லி' திரைப்படம் ரூ.30.9 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நேற்று ஏப்.10 வெளியான 'குட் பேட் அக்லி' திரைப்படம், மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் இத்திரைப்படம் முதல் நாளில் ரூ.30.9 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ஆனால், உலக அளவில் இப்படம் எவ்வளவு வசூலித்தது என்பது குறித்த விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை.