திருநெல்வேலி: பணகுடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் பாலியல் ரீதியாக பேசிய மருத்துவரை போலீசார் கைது செய்தனர். மருத்துவர் பாலசந்தர் (45) தன்னிடம் ஆபாசமாக பேசியதாக பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. பாலசந்தர் எந்நேரமும் குடிபோதையில் இருப்பார் என்று மருத்துவமனை ஊழியர்களும், பொதுமக்களும் புகார் தெரிவித்தனர்.