எலான் மஸ்க், டொனால்டு டிரம்புக்கு குவியும் வாழ்த்து

76பார்த்தது
கொடுத்த வாக்குறுதியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிறைவேற்றியுள்ளதாக குறிப்பிட்டு அமெரிக்காவின் வெள்ளை மாளிகை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. 9 மாத நீண்ட காத்திருப்புக்குப் பின் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் உள்ளிட்டோர் இன்று அதிகாலை இந்திய நேரப்படி 2.41 மணிக்கு புளோரிடா கடலில் தரையிறங்கியது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் இதனை சாத்தியப்படுத்தியது. இதற்காக எலான் மஸ்க், ஸ்பேஸ் எக்ஸ், நாசாவிற்கு பாராட்டு குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்தி