உடுமலையில் பாஜக சார்பில் கூடுவோம் கூட்டுவோம் நிகழ்ச்சி!

60பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நகர பாஜக சார்பில் கூடுவோம் கூட்டுவோம் நிகழ்ச்சி நகர பாஜக தலைவர் கண்ணாயிரம் தலைமையில் ஏரி பாளையம், கங்காதரன் லே-அவுட் ஸ்ரீ, ருத்தரப்பா நகர் காந்தி சவுக், மாணிக்கம் வீதி காந்திநகர் உட்பட 13 இடங்களில் நடைபெற்றது. 

அப்போது கூடுவோம் கூட்டுவோம் நிகழ்ச்சி குறித்து நகர பாஜக தலைவர் கண்ணாயிரம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் இந்து ஒற்றுமை சம்பவங்கள் குறித்தும், போதை விழிப்புணர்வு பற்றிய கலந்துரையாடல் மற்றும் உள்ளூரில் நாம் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டது. 

இறுதியாக போதை விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது. நிகழ்வுகளில் மாவட்ட செயலாளர் கலா, மாவட்ட மகளிர் அணி செயலாளர் ராதிகா, நகர துணைத் தலைவர்கள் உமா குப்புசாமி, கணேஷ் ஆனந்த், நகர பொதுச்செயலாளர்கள் சீனிவாசன், தம்பிதுரை, நகர செயலாளர்கள் ஹரிஹரன் மணிவண்ணன், நகர மகளிர் அணி தலைவர் ரதி, பூத்கமிட்டி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி