திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்குட்பட்ட கல்பனா ரோடு, ராஜேந்திர ரோடு உட்பட பல்வேறு பகுதிகளில் பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்ற இந்த நிலையில் நாளை தமிழ் புத்தாண்டு முன்னிட்டு பொதுமக்கள் வழிபாடு செய்வதற்கு முக்கனிகள் ஆன
மா, பலா , வாழை உள்ளிட்ட பழங்களை வாங்குவதற்கு தற்போது அதிக அளவில் குவிந்தனர். பழங்களின் விலை சற்று அதிகமாக இருந்தாலும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்று வருகின்றனர் என வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது