பாமக தலைவர் அன்புமணி பதவி நீக்கம் செய்யப்பட்டு, ராமதாஸ் அப்பொறுப்பை எடுத்துக்கொண்டார். இதனால் பாமகவில் தலைவர் பதவிக்கு சண்டை நடந்து வருகிறது. இந்நிலையில், சென்னை அக்கரையில் உள்ள இல்லத்தில் அன்புமணியுடன் பாமக இளைஞரணி தலைவர் முகுந்தன் சந்தித்து இருக்கிறார். இளைஞரணி தலைவராக நியமனம் செய்யப்பட்ட முகுந்தனுக்கு அன்புமணி மேடையிலேயே எதிர்ப்பு தெரிவித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது. முகுந்தன் அன்புமணியிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறப்படுகிறது.