உடுமலை: குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் பரபரப்பு புகார்

57பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை உட்கோட்ட அளவிலான மாதாந்திர விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் இன்று(செப்.6) உடுமலை அரசு கலைக் கல்லூரியில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆர். டி. ஓ ஜஸ்வந்த் கண்ணன் தலைமை வகித்தார். அதைத் தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது. அப்போது உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் பேசுகையில், தென்னை மரங்களை தாக்கும் வாடல் நோயை கட்டுப்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். உடுமலை பிஏபி கால்வாயின் கரையில் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள், கட்டிடக்கழிவுகளை கொட்டி வருகின்றனர். அவை தண்ணீரில் விழுந்து மதகுகளை அடைத்துக் கொள்கிறது.

இதனால் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்வதில் பாதிப்பு ஏற்படுகிறது. மடத்துக்குளம் அருகே துங்காவி பகுதியில் உள்ள கிரஷர்களால் குடியிருப்பு வாசிகள் விவசாயிகள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் உடுமலை நில அளவைத் துறையில் முறைகேடு நடந்து வருகிறது. நில அளவை முறையாக செய்வதில்லை. உட்பட பல்வேறு கோரிக்கைகள் பேசினர். இதற்கு தீர்வு காண வேண்டும். இவ்வாறு பேசினார்கள். இந்த நிகழ்வில் அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி