உடுமலையில் முன்னாள் ராணுவ வீரர் நலச் சங்க ஆலோசனை கூட்டம் லெப்டினென்ட் சுபாஷ் ரேணுகாதேவி அறக்கட்டளை வளாகத்தில் உள்ள முன்னாள் இராணுவ வீரர் நலச்சங்க அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் இராமலிங்கம் தலைமை வகித்தார். கூட்டத்தில் சங்க உறுப்பினர்களின் குறைகள் நிறைகளை பற்றி விவாதிக்கப்பட்டது. உறுப்பினர்களின் பணிக்கால ஆவணங்கள் சரிசெய்து கொள்ள ஆலோசனை வழங்கப்பட்டது. முன்னாள் ராணுவ வீரர்கள் வாழ்நாள் சான்றிதழ்களை அளிப்பவர்கள் உடனடியாக அளித்து அவர்களுடைய பென்ஷன் நிறுத்தப்படாமல் பாதுகாத்துக் கொள்ள அறிவுரை வழங்கப்பட்டது. மருத்துவ உதவிகளை முறைப்படி பெறுவது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும் முப்படையில் மாணவர்களை சேர்ப்பதற்கும் அவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.