உடுமலை: கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாநில செயற்குழு கூட்டம்

75பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த சின்னவீரம்பட்டியில் உள்ள தனியார் திருமண தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாநில செயற்குழு கூட்டம் மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்விற்கு மாநில தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். திருப்பூர் மாவட்ட செயலாளர் அபிராமி வரவேற்புரை ஆற்றினார். கோவை மாவட்ட தலைவர் சசிகலா அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாநில பொதுச் செயலாளர் நவநீதி கிருஷ்ணன் வேலை அறிக்கை வாசித்தார். மாநில பொருளாளர் விஜயன் வரவு செலவு அறிக்கை சமர்பித்தார். மாநில துணைத்தலைவர் அம்சராஜ், மாவட்ட தலைவர் ராணி, மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியம், மாவட்ட தலைவர் ஜெகநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். அதைத் தொடர்ந்து தீர்மானங்கள் முன்மொழியபட்டது. அதன்படி பால் கூட்டுறவு தணிக்கை துறையில் 3 முதல் 5 ஆண்டுகளுக்கு மேல் பணி புரியும் துறை அலுவலர்களை உடனே பணிவிடுவிப்பு செய்து தாய் துறைக்கு ஈர்த்திட வேண்டுதல், 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வரும் பதிவு எழுத்தர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டுதல், புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 6 மாவட்டங்களில் போதிய பணிநிலைத்திறன் ஏற்படுத்தி பணியாளர்கள் நியமனம் செய்யப்பட வேண்டுதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் அடங்கிய தீர்மானங்கள் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது. நிறைவாக திருப்பூர் மாவட்ட தலைவர் கனகராஜ் நன்றியுரை கூறினார்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி