திருப்பூர் மாவட்டம் உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா வரும் ஏப்ரல் 1ஆம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்க உள்ள நிலையில் குட்டை திடல் பகுதியில் விளையாட்டு உபகரணங்கள் அமைக்க 1கோடியே 9 லட்சத்து 12 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இன்று கோட்டாட்சியர் அலுவலகத்தில் 3-வது முறையாக நடைபெற்ற காலத்தில் ஏலத்தொகை குறைக்கப்படாத காரணத்தால் ஒப்பந்ததாரர்கள் முன் வரவில்லை மேலும் மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என வட்டாட்சியர் தெரிவித்தார்