தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்ற தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அக்கட்சித் தலைவர் விஜய் போட்டியிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தருமபுரி மாவட்ட வழக்கறிஞர் அணி பிரிவு ஆலோசனைக் கூட்டம் இன்று (நவ.17) நடைபெற்றது. கூட்டத்திற்குப் பிறகு கட்சியின் மாவட்ட தலைவர் தா.ப.சிவா, “2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தலைவர் விஜய் தருமபுரியில் போட்டியிடுவார்” என தெரிவித்துள்ளார்.