விழுப்புரத்தில் அதிமுக கள ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உரையாற்றிய அதிமுக முன்னாள் அமைச்சரும் அமைப்புச் செயலாளருமான ஜெயக்குமார், கடுமையாக மீம்ஸ்கள் போட்டு பாஜகவை விமர்சிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். சில தினங்களுக்கு முன் பாஜகவுடன் எக்காலத்திலும் கூட்டணி இல்லை என திட்டவட்டமாக அறிவித்த ஜெயக்குமார், தற்போது பாஜகவை கடுமையாக விமர்சிக்க வேண்டாம் என கூறியுள்ளது பல யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது.