தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையாத சூழலில், வருகிற 23-ம் தேதி அல்லது 24-ம் தேதிகளில் தெற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வாளர்கள் தகவல் அளித்துள்ளனர். மேலும், இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலமாகவோ அல்லது புயலாகவோ வலுப்பெறலாம் என்றும் இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் பருவமழை தீவிரம் அடையத் தொடங்கும் என்றும் கூறியுள்ளனர்.