உயர்கல்வி சேரும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது. இந்நிலையில், 2022 - 2023ஆம் ஆண்டு வரை உயர்கல்வியில் மாணவிகளின் சேர்க்கை 13ஆயிரத்து 684 ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டில் மட்டும் 2லட்சத்து 30ஆயிரத்து 820 மாணவிகள் பயனடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், இத்திட்டத்தில் 99.2% CSC/SC, BC, MBC பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.