திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குடிமங்கலம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 4வது மாநாடு இன்று (டிசம்பர் 1) நடைபெற்றது. முன்னதாக விவசாயிகள் பேரணி குடிமங்கலம் நால்வழி சாலையில் தொடங்கி மண்டபத்தை அடைந்தது. நிகழ்வில் ஆனைமலை நல்லாறு திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அமராவதி சக்கரை ஆலையை நவீனப்படுத்த வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செயலாளர் சின்னச்சாமி, மாவட்ட பொருளாளர் சௌந்தரராஜன், மாவட்டத் துணைத் தலைவர் துளசிமணி கிட்டு என்கிற சுப்பிரமணியம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.