திருப்பூர் மாவட்டம்
உடுமலை அருகே எஸ் வி புரம் பகுதிகளில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்
இன்று விக் ஷித் பாரத் மற்றும் இளைஞர் அணி மாவட்ட பொறுப்பாளர் விஷ்ணு கார்த்திக ஏற்பாட்டில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்களை திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் மோகன பிரியா சரவணன் தலைமையில் தங்களை இணைத்துக் கொண்டனர். பின்னர் பாஜகவில் இணைந்து அனைவருக்கும் மாவட்ட தலைவர் மோகன பிரியா சரவணன் பொன்னாடை
அணிவித்து வரவேற்றார்.
பின்னர் தமிழகத்தில் தற்பொழுது வேகமாக வளரும் கட்சியாக பாஜக உருவாக்க காரணம் தமிழக
பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் எனவும் பாஜகவின் கொள்கைகள் அனைத்து தர மக்களையும் எளிதாக சென்றடைந்த காரணத்தால் பாஜகவில் பலர் தங்களை இணைத்துக் கொண்டு வருகின்றனர் வருங்காலத்தில் பாஜக தமிழக அரசியலில் ம மிகப்பெரிய அசைக்க முடியாத சக்தியாக மாறும் எனவும் 2026 ஆம் ஆண்டு பாஜக சார்பில் ஆட்சி அமைவது உறுதி என பேசினார். இந்த நிகழ்வில் மாவட்ட பொதுச் செயலாளர் வடுகநாதன் ,
உடுமலை கிழக்கு மேற்கு ஒன்றிய தலைவர் லோகேஸ்வரன், உடுமலை கிழக்கு மேற்கு ஒன்றிய பொதுச் செயலாளர் மதிவாணன், நித்தியானந்தம்,
உடுமலை முன்னாள் நகர பாஜக தலைவர் கண்ணாயிரம் மற்றும் பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.