திருப்பூர் மாவட்டம் உடுமலை பிஜி ராவ் நகர் நகராட்சி ஆரம்ப பள்ளியில் உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்கம் பிரியா எலும்பு முறிவு மூட்டு நோய் சிகிச்சை மையம் பிரியா பாராமெடிக்கல் இன்ஸ்டியூட் உடுமலை லேப் & எக்ஸ்ரேஸ் உடுமலை ஆம்புலன்ஸ் சர்வீஸ் மற்றும் ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் இணைந்து நடத்திய எலும்பு மூட்டு கால் வலி கை வலி இடுப்பு வலி போன்ற நோய்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் சுந்தரராஜன் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டனர்.
மேலும் இரத்த அழுத்தம் இரத்தத்தில் சர்க்கரை அளவு இரத்த வகைகள் ஹீமோகுளோபின் போன்ற பரிசோதனையினை உடுமலை லேப் & எக்ஸ்ரேஸ் குழுவினர் தவசுமணி, மேனகா தலைமையிலான குழுவினர் மேற்கொண்டனர். இந்த இலவச மருத்துவ முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்விற்கான ஏற்பாட்டினை ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சேஷநாராயனன் செய்திருந்தார்.