திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி நகர் அரசு உயர்நிலைப்பள்ளி இடிந்து விழும் தருவாயில் இருந்த நிலையில் நேற்று முன்தினம் கட்டடத்தின் மேற்கூரையின் காரை இடிந்து விழுந்ததால் குழந்தைகள் அச்சம் அடைந்தனர். கட்டிடத்தை பராமரிக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்த நிலையில் தற்பொழுது ஆபத்தான நிலையில் இருந்த கட்டிடத்தை ஜேசிபி மூலம் இடித்து அகற்றப்பட்டது எனவே புதிய கட்டடத்தை விரைவாக கட்ட வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தி உள்ளனர்.