புழல் மத்திய சிறையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
சிறைவாசிகளுக்கு வழங்கப்பட்டு வரும் வசதிகள் குறித்து நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் என். செந்தில்குமார் ஆகியோர் சுமார் மூன்று மணி நேரம் ஆய்வு மேற்கொண்டனர். பெண் சிறைவாசிகளிடம், பாதுகாப்பு, சுகாதாரம் உள்ளிட்டவை உரிய வகையில் வழங்கப்படுகிறதா என்பது குறித்தும் நீதிபதிகள் கேட்டறிந்தனர்.