டெல்லி: உச்ச நீதிமன்றத்தில், 16 வருட லிவ்-இன் உறவில் இருந்த நபர், தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிமன்றம் நிராகரித்தது. மேலும், இவ்வளவு நீண்ட காலம் இருவரும் ஒன்றாக இருந்த நிலையில், வற்புறுத்தலின் பேரில் எதுவும் நடந்திருக்க முடியாது என நீதிமன்றம் கூறியுள்ளது. விரிவுரையாளரான அப்பெண், தன்னை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி அந்நபர் சீரழித்ததாக புகார் அளித்திருக்கிறார்.