நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகாததால் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் அகோலாவில் கடந்த 2022 ஆம் ஆண்டு பாரத் ஜோடா யாத்திரையின் போது சாவர்க்கர் குறித்து அவதூறாக பேசியதாக ராகுல் காந்தி மீது லக்னோ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் அவர் ஆஜராகாததால் அபராதம் விதித்த நீதிமன்றம் விசாரணையை ஏப்ரல் 14-க்கு ஒத்திவைத்தது.