பனங்கிழங்கில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. நார்ச்சத்து மிகுந்த இதை பலரும் விரும்புவதில்லை. ஆனால் இதை பாயாசமாக செய்து சாப்பிடலாம். பனங்கிழங்கை தண்ணீர் சேர்த்து வேகவைத்து தோல் நீக்கி விழுதாக அரைக்கவும். வாணலியில் நெய் சூடானதும், அரைத்த பனை விழுது, பனைவெல்ல கரைசல் சேர்த்து வெந்தவுடன் இறக்கவும். சூடு தணிந்த பின் தேங்காய் பால், ஏலக்காய் தூள், நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து சாப்பிட்டால் சுவை மிக்க பனங்கிழங்கு பாயாசம் தயார்.