திருச்சி எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்திலிருந்த ஜெய்னி என்ற பெண் யானை உடல் நலக்குறைவால் உயிரிழந்தது. இந்த மையத்தில் 10 பெண் யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்கிருந்த 60 வயதுடைய ஜெய்னி என்ற யானை உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, மிகவும் பலவீனமாக இருந்தது. சிறப்பு மருத்துவக் குழுவினர் யானைக்கு சிகிச்சையளித்து வந்த நிலையில் அந்த யானை உயிரிழந்தது. வனத்துறையினர் முன்னிலையில் கால்நடை மருத்துவர்கள் யானையின் உடலை கூறாய்வு செய்தனர். தொடர்ந்து உடல் காப்புக் காட்டில் புதைக்கப்பட்டது.