குடிமங்கலம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் நீர் மோர் பந்தல்

74பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்ற தொகுதி குடிமங்கலம் ஒன்றியம் பெதப்பம்பட்டி நால்ரோடு பகுதியில் கடும் வெயிலில் பொதுமக்கள் தாகம் தீர்க்கும் வகையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவுறுத்தல் படி குடிமங்கலம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் நீர்மோர் மற்றும் தண்ணீர் பந்தலை திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன் திறந்து வைத்து பொது மக்களுக்கு நீர்மோர் மற்றும் தர்பூசணி பழங்களை வழங்கினார். இந்த நிகழ்வில் குடிமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் அணைக்கடவு கிரி, உடுமலை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் சேகர் மற்றும் குடிமங்கலம் வடக்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள் மற்றும் கிளை செயலாளர்கள், சார்பணி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி