திருப்பூர் மாவட்டம் உடுமலையில் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜே கே வாசன் வருகை புரிந்தார் அப்பொழுது செய்தியாளர்களிடம் பேசும் பொழுது. தமிழகத்தில் தற்பொழுது தினமும் பல இடங்களில் கொலை கொள்ளை பாலியல் சம்பவம் போதை பொருள் விற்பனை என சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இவற்றை அரசு கட்டுபடுத்த வேண்டும் , இந்தியாவில் அமைதியாகவும் நேர்மையாகவும் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல் குறித்து வெளிநாட்டில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியது ஏற்க கூடியது அல்ல எனவும் , பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் உள்ள முறைகேடுகளால் கடைமடை வரை தண்ணீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று பேசினார். நிகழ்வில் தாமக மாநிலத் துணைத் தலைவர் விடியல் சேகர் , மாநில பொதுச் செயலாளர் யுவராஜா, மேற்கு மண்டல இளைஞர் அணி தலைவர் அபிராமி செந்தில் குமார், திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் ரத்தினவேல், திருப்பூர் தெற்கு மாவட்ட பொருளாளர் ஜி ஆர் செந்தில் குமார் , மாவட்ட துணை தலைவர் ஜல்லிப்பட்டி நாராயணசாமி, நகர தலைவர் பாலகிருஷ்ணன்,
உயர்மட்ட குழு உறுப்பினர் யூ கே பி முத்துகுமார் சாமி, இளைஞரணி மாவட்ட தலைவர் பிரசாந்த் குமார், இளைஞரணி மேற்கு மண்டல நிர்வாகிகள் கார்த்திக் கண்ணன் ஆசாரூதீன் மற்றும் வட்டாரத் தலைவர்கள் வாளவாடி ரவி, அருணகிரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.