தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பாக உடுமலையில் நடைபெற்ற குறுமை அளவிலான பாரதியார் தினம் மற்றும் குடியரசு தின ஹாக்கி போட்டிகளில் பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி
மிக மூத்தூர் மற்றும் மிக இளையோர் பிரிவில் மாணவர்கள் ஹாக்கி அணியினர் வெற்றி பெற்றனர்.
இதனால் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள திருப்பூர் வருவாய் மாவட்ட அளவில் ஆன ஹாக்கி போட்டிக்கு தகுதி பெற்றனர். மேலும் மாணவிகள் மிக மூத்தோர் , மூத்தோர், இளையோர் பிரிவுகளில் இரண்டாம் இடம் பெற்றனர் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியர் பாபு , உடற் கல்வி ஆசிரியர் செந்தில்குமரவேல், மற்றும் ஆசிரியர்கள் பள்ளி மேலாண்மை குழுவினர் வாழ்த்து தெரிவித்து சான்றிதழ் அளித்தனர்.