உடுமலையில் கம்பராமாயணம் சொற்பொழிவு நிறைவு

568பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் கார்த்திகை விழா மன்றத்தின் சார்பாக 800 வது நிகழ்வாக ஆனி மாத கிருத்திகை விழாவாக கம்பராமாயண தொடர் சொற்பொழிவு நடைபெற்றது. கடந்த 29-ம் தேதி தொடங்கி நேற்று வரையில் 6 நாட்கள் இந்த நிகழ்வு நடைபெற்றது. முதல் நாளில் நடையின் நின்றுயர் நாயகன் என்ற தலைப்பிலும், 2-ம் நாளில் பங்கமில் குணத்து பரதன் என்ற தலைப்பிலும், 3-ம் நாளில் மான் செய்த மாயம் என்ற தலைப்பிலும், 4-ம் நாளில் வரம்பில் ஆற்றல் வாலி என்ற தலைப்பிலும், 5-ம் நாளாக நேற்று முன்தினம் சுகம் தரும் சுந்தரகாண்டம் என்ற தலைப்பில், இறுதி நாளான நேற்று வசிட்டனே புனைந்தான் மௌலி என்ற தலைப்பிலும் ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்றது. முன்னதாக சீதாராமர் பட்டாபிஷேக படத்திற்கு மாலை அணிவித்து வழிபாடு நடைபெற்றது. அதைத் தொடர்ந்து சுபாசு சந்திர போஸ் இந்த தொடர் சொற்பொழிவை நிகழ்த்தினார். நிகழ்வுக்கான ஏற்பாடுகள் கார்த்திகை விழா மன்றத்தின் சார்பில் செய்யப்பட்டு இருந்தது.

தொடர்புடைய செய்தி