திருப்பூர் மாவட்டம் உடுமலை பொள்ளாச்சி சாலைகளில் இருந்து பிரியும் முக்கிய சாலையான தளிரோடு வழியாக அமராவதி அணை திருமூர்த்தி அணை மூணாறு உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு அதிக அளவு பொதுமக்கள் சுற்றுலா வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் இப்பகுதியில் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் போக்குவரத்து காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு போக்குவரத்து விதிகளை மீறிய வாகனங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.