திருப்பூர் மாவட்டம், அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக அருப்புக்கோட்டை சேர்ந்த நபரின் மகன் இறந்துவிட்டார். திருப்பூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அருப்புக்கோட்டைக்கு தன் மகனின் சடலத்தை எடுத்துச் செல்ல வேண்டும். வறுமையின் காரணமாக சொந்த ஊருக்கு உடலை எடுத்துச் செல்ல வசதி இல்லாததால் அரசு இலவச அமரர் ஊர்தியை கேட்டுள்ளனர்.
அரசு மருத்துவமனையில் அமரர் உறுதி வாகனம் உடலை எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.
அப்போதுதான் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஒரே அமரர் ஊதியில் இரண்டு, மூன்று சடலங்கள் அடுக்கி வைக்கப்பட்டு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததை பார்த்து ஆத்திரம் அடைந்த அருப்புக்கோட்டை காரர் அமரர் உறுதி வண்டிகள் இருந்தும் இப்படி சடலங்களோடு சடலங்கலாக உடலை ஏன் எடுத்துச் செல்கிறீர்கள் எனக் கேட்டுள்ளார். அதற்கு அங்கிருந்து ஊழியர்கள் இது வழக்கமான ஒன்றுதான் செல்லும் வழியில் இறக்கி வைத்துவிடுவார்கள் எனக் கூறியுள்ளனர். இலவசம் என்ற போர்வையில் இப்படி இரண்டு மூன்று சடலங்களை எடுத்துச் செல்வது வேதனையாக இருப்பதாக வண்டிகள் இருந்தும் இப்படி அலட்சியமாக இருக்கிறாங்க என மகனை இழந்த தந்தை அதனை வீடியோ எடுத்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். வீடியோ வைரலாகி வருகிறது.