அனைத்து சமுதாய மக்களும் ஒற்றுமையுடன் வாழ சிறப்பு பிரார்த்தனை

50பார்த்தது
இஸ்லாமியர்களின் இறை தூதர் நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை இஸ்லாமியர்கள் மிலாடி நபி விழாவாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் திருப்பூரில் மீலாது கமிட்டியின் சார்பில் நபி புகழ் பாடும் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியை ஜமாத்துல் உலமா திருப்பூர் மாவட்ட செயலாளர் அபுல் காசிம்
பாகவி ஹஜ்ரத் நாட்டுமக்கள் ஒற்றுமையுடன் வாழ சிறப்புப் பிரார்த்தனை செய்தும், தொழில் அதிபர் சாதிக் அலி கொடி அசைத்ததும் துவக்கி வைத்து பெரிய பள்ளிவாசலின் தலைவர் சிராஜுதீன் சமாதான புறாவை பறக்கவிட்டு பேரணியை துவக்கி வைத்தனர்.

பேரணியில் திருப்பூர் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான சிறுவர், சிறுமியர்கள் புத்தாடை அணிந்து முக்கிய வீதிகளின் ஊர்வலமாகச் சென்றனர். பேரணியில் கலந்து கொண்ட சிறுவர், சிறுமியர்கள் அணைத்து மதத்தினரும் சமத்துவத்தை பேண வேண்டும், அமைதியை காக்க வேண்டும் உள்ளிட்ட கோஷங்களை எழுப்பிக் கொண்டு ஊர்வலமாகச் சென்றனர். இந்த நிகழ்ச்சியில் மீலாது கமிட்டியின் தலைவர் சையது மன்சூர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் மாவட்ட தலைவர் சையது முஸ்தபா, உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி