சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளால் விபத்து அபாயம்

71பார்த்தது
சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளால் விபத்து அபாயம்
சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளால் விபத்து அபாயம்



திருப்பூர் மாவட்டம் ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி எஸ். எஸ். நகர் பெருமாநல்லூர் அருகே சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் குப்பைகளை பலர் சாலையோரம் வீசி செல்கின்றனர். அந்த குப் பைகள் காற்றில் பறந்து ரோட்டுக்கு வரும் அபாயம் உள்ளது. இதனால் இருசக்கர மற்றும் கனரக வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. மேலும் அந்த குப்பைகளிலிருந்து துர்நாற்றமும் வீசுவதால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அந்த பகுதியில் சாலையோரம் கொட்டப் படும் குப்பைகளை அகற்றி பொதுமக்களை பாதுகாப்பதுடன், வாகன ஓட்டிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்து மாநகராட்சி ஊழியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி