திருப்பூரில் உள்ள பின்லாடை நிறுவனங்கள் தங்களது இயந்திரங்கள் மற்றும் நிறுவனங்களை தூய்மைப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதேபோன்று தங்களது வாகனங்களை தூய்மைப்படுத்தி வருகின்றனர். மேலும் ஆயுதபூஜைக்கு தேவையான பூக்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்க திருப்பூர் மாநகராட்சி தினசரி பூ மார்கெட்டில் பொதுமக்கள் கூட்டமானது அதிகரித்து காணப்பட்டது. ஆயுத பூஜையால் பூக்களின் விலை அதிகரித்துள்ளது, மல்லி கிலோ 800 முதல் 1000 ரூபாய் வரையிலும், முல்லை கிலோ 600 ரூபாய்க்கும், செவ்வந்தி கிலோ 250 லிருந்து 300 ரூபாய் வரையிலும், சம்பங்கி கிலோ 300 ரூபாய்க்கும், செவ்வரளி கிலோ 500 ரூபாய்க்கும் விற்பனையானது. மேலும் பூஜைக்கு தேவையான வாழைக்கன்று, பொரி, பழங்கள் உள்ளிட்ட பிற பொருட்களின் விலையும் சற்று அதிகரித்தே காணப்பட்டது. விலை அதிகம் என்றாலும் பொதுமக்கள் பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர் வாங்கிச் சென்றனர், பூ மார்கெட்டில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால் குமரன் சாலை, தென்னம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.