சுங்கச்சாவடி எதிர்பாளர்கள் மாவட்டஆட்சியர் அலுவலகத்தில்மனு

70பார்த்தது
அவிநாசி பாளையம் வரை செல்லக்கூடிய சாலையை தேசிய நெடுஞ்சாலை ஆக மாற்றி சுங்கச்சாலையாக நெடுஞ்சாலை துறை ஆணையம் அறிவித்துள்ளது. இந்த சாலையில் பயணிக்கும் வாகனங்களுக்கு சுங்க வசூல் செய்வதற்காக வேலம்பட்டி பகுதியில் சுங்கச்சாவடி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுங்கச்சாவடி கட்டிடம் ஆனதுநீர்நிலைபுறம்போக்கில் உள்ளகுட்டையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அதை அகற்ற வேண்டும் எனவும் சுங்கச்சாவடி எதிர்பாளரான gps கிருஷ்ணசாமி உள்ளிட்ட அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பலரும் அதிகாரிகளிடம் மனு அளித்தார்கள். மேலும் உயர்நீதிமன்றத்திலும் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்திருந்தார்கள். இந்த வழக்கின் தீர்ப்பில் அந்த இடத்தை உரிய ஆய்வு செய்து ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும் என்ற உத்தரவு வந்த நிலையில், தொடர்ச்சியாக சுங்கச்சாவடியை செயல்படுத்த முயல்வதாகவும், ஆக்கிரமிப்பு அகற்றாமல் செயல்படுத்தக்கூடாது என்றும் கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுங்கச்சாவடி எதிர்ப்பாளர்கள் இன்று மனு அளித்தார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி