புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு.. இன்று இறுதிச்சடங்கு

562பார்த்தது
புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு.. இன்று இறுதிச்சடங்கு
புதுச்சேரியில் 9 வயது நிரம்பிய சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரியை மட்டுமின்றி மொத்த தேசத்தையும் இந்த சம்பவம் உலுக்கி உள்ளது. கொலை வழக்கில் கைதான குற்றவாளிகள் கருணாஸ், விவேகானந்தன் ஆகியோர் மீது போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் சிறுமி கொலை வழக்கில் சிறப்பு குழு விசாரணையை தொடங்கியுள்ளது. இன்று அடக்கம் செய்யப்படும் என சிறுமியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி