தேர்தல் சிறப்பு மை தயாரிக்கும் பணி மும்முரம்

82பார்த்தது
தேர்தல் சிறப்பு மை தயாரிக்கும் பணி மும்முரம்
நாட்டில் நடைபெறும் தேர்தலில் வாக்காளர்கள் வாக்களித்த பின்னர் இடது கையின் ஆள் காட்டி விரலில் எளிதில் அழியாத மை வைக்கப்படும். அதன் வாக்களித்துவிட்டார் என்பது உறுதி செய்யப்படும். இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், மை தயாரிக்க மைசூரு பெயின்ட்ஸ் அண்ட் வார்னிஷ் லிமிடெட் (எம்பிவிஎல்) நிறுவனத்துக்கு தலைமை தேர்தல் ஆணையம் ‘ஆர்டர்’ வழங்கி உள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கே.முகமது இர்பான் கூறுகையில், ‘‘சிறப்பு மை தயாரிக்கும் பணி 70 சதவீதம் முடிந்துவிட்டது. மார்ச் 15-ம் தேதிக்குள் முழு பணியும் முடிந்துவிடும் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி