பள்ளி வகுப்பறை கட்ட பூமி பூஜை

68பார்த்தது
பள்ளி வகுப்பறை கட்ட பூமி பூஜை
திருப்பூர் 1-வது மண்டலம் 24-வது வார்டு சாமுண்டிபுரம் செல்லம்மாள் காலனியில் மாநகராட்சி தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு தமிழக அரசின் மாநில நிதி குழு திட்டத்தின் கீழ் ரூ. 1 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் தரைத்தளத்தில் 5 வகுப்பறைகளும், முதல் தளத்தில் 5 வகுப்பறைகளும் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு 24- வது வார்டு மாமன்ற உறுப்பினரும், ம. தி. மு. க. மாநகர மாவட்ட செயலாளருமான ஆர். நாகராஜ் தலைமை தாங்கினார். மாநக ராட்சி அதிகாரி சரவணகுமார், பள்ளி ஆசி ரிய, ஆசிரியைகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி