சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ஆனந்தம்’ சீரியலில் வில்லியாக நடித்து பிரபலமானவர் பிருந்தா தாஸ். இவரின் மகன் கிஷன் தாஸ் ஒரு யூடியூபர் ஆவார். சில குறும்படங்களலும் நடித்துள்ளார். ‘முதல் நீ முடிவும் நீ’ என்கிற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான இவர், தற்போது சில படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த நிலையில் அவருக்கு சுசித்ரா என்ற பெண்ணுடன் திருமணம் முடிந்துள்ளது. அந்த புகைப்படங்களை அவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்திருக்கிறார்.