பிசிசிஐ-யின் வருடாந்திர விருது வழங்கும் விழாவில் சச்சின் டெண்டுல்கருக்கு கர்னல் சி.கே. நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு வாழ்த்துகள் குவிகிறது. அந்த வகையில் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கின் வாழ்த்து செய்தியில், "எங்கள் தலைமுறையின் ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்கும், இடைவிடாத கடின உழைப்பால் கனவுகள் நனவாகும் என்பதை காட்டியவர் நீங்கள்" என்றார்.