கடந்த டிசம்பரில் 1,000-க்கும் மேற்பட்ட மருந்து, மாத்திரைகள் மத்திய மருந்து தரக்கட்டுப்பாடு நிறுவனத்தால் ஆய்வு செய்யப்பட்டன. அவற்றில் கிருமித் தொற்று, ஜீரண மண்டல பாதிப்பு, சளித் தொற்று, வைட்டமின் குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் 135 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டுள்ளது. அந்த மருந்துகள் குறித்த விபரங்கள் https://cdsco.gov.in/ என்ற இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.