இந்தியாவில் காபி உற்பத்தியில் கேரளா இரண்டாவது இடத்தில் உள்ளது. வயநாடு மாவட்டம் மாநிலத்திலேயே அதிக உற்பத்தியைக் கொண்டுள்ளது. இந்த நிலையில் தற்போது காபி உற்பத்தி சற்று குறைந்துள்ள நிலையில், விலை கணிசமாக உயர்ந்துள்ளது. காபி கொட்டைகள் தற்போது அண்டை மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஒரு கிலோ காபி கொட்டை தற்போது ரூ.300 வரை விற்கப்படுகிறது.