100 ஆப்பிள்கள் மற்றும் 50 லிட்டர் பசும்பாலில் இருக்கக்கூடிய சத்துக்கள் ஸ்பைரூலினாவில் இருந்து கிடைக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த ஸ்பைரூலினா ஒரு வகை கீரை வகையைச் சேர்ந்தது மற்றும் நல்ல தண்ணீரில் வளரக்கூடியது. ஒரு காலத்தில் அமெரிக்காவில் மட்டுமே கிடைத்த இது, தற்போது இந்தியாவிலும் கிடைக்கிறது. சோர்வின்றி சுறுசுறுப்பாக பணியாற்றவும், அதிகப்படியான அமினோ ஆசிட்ஸைப் பெறுவதற்கும் இந்த ஸ்பைரூலினா உதவுகிறது.