மகாவிஷ்ணுவை கைது செய்தது கேவலமான செயல் என்றும், அரசு பள்ளிகளில் தொடரும் சர்ச்சைகளுக்கு பொறுப்பேற்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் ராஜினாமா செய்ய வேண்டும் என திருப்பூரில் பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்தார்.
திருப்பூர் பாளையக்காடு பகுதியில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு அன்னதான விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் மகாவிஷ்ணுவை 200 போலீசார் கொண்டு கைது செய்வதன் அவசியம் என்ன? இது ஒரு கேவலமான செயல். தொடர்ந்து அரசு பள்ளியில் நடைபெறும் சர்ச்சைகளுக்கு பொறுப்பேற்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ராஜினாமா செய்ய வேண்டும்.
தொடர்ந்து பேசிய அவர் அன்னிய செலவாணியில் தமிழகம் ஆறாவது இடத்தை பிடித்திருக்கிறது. பங்களாதேஷில் இவ்வளவு பெரிய பிரச்சனை நடந்து கொண்டிருக்கும்பொழுது திருப்பூருக்கு பெரும்பாலான தொழில் வாய்ப்புகள் வந்திருக்கக் கூடிய வாய்ப்பு உள்ள நிலையில், தமிழக அரசு நடவடிக்கை எடுக்க தவறிவிட்டதாக குற்றம்சாட்டினார்.