வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய வாலிபர் கைது

79பார்த்தது
வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய வாலிபர் கைது
திருப்பூர் மண்ணரையை சேர்ந்தவர் குமாரசாமி (வயது 45). பனியன் நிறுவன தொழிலாளி. இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டுவிட்டு வேலைக்கு சென்றார். மாலையில் வந்து பார்த்த போது வீட்டு கதவு பூட்டை உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே இருந்த 6 பவுன் நகை திருடப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து அவர் திருப்பூர் வடக்கு குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இந்தச் சம்பவம் தொடர்பாக ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்த தமிழரசன் (26) என்பவரை போலீசார் கைது செய்து நகையை மீட்டனர்.

தொடர்புடைய செய்தி