திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: -
பொது வினியோகத்திட்ட சிறப்பு குறைதீர்ப்பு முகாம் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணிவரை நடைபெற உள்ளது. அவினாசி தத்தனூர் வேளாண்மை கூட்டுறவு சங்கத்திலும், தாராபுரம் செலாம்பாளையம் வேளாண்மை கூட்டுறவு சங்கத்திலும், காங்கயம் ஆலாம்பாடி வேளாண்மை கூட்டுறவு சங்கத்திலும் நடக்கிறது.
மடத்துக்குளம் வேடப்பட்டி வேளாண்மை கூட்டுறவு சங்கத்திலும், பல்லடம் வேலம்பாளையம் கிராம ஊராட்சி இ-சேவை மையம் மூணுமடையிலும், திருப்பூர் வடக்கு நெருப்பெரிச்சல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும், திருப்பூர் தெற்கு மங்கலம் வேளாண்மை கூட்டுறவு சங்கத்திலும், உடுமலை தேவனூர் புதூர் வேளாண்மை கூட்டுறவு சங்கத்திலும், ஊத்துக்குளி தென்முகம் காங்கயம்பாளையம் வேளாண்மை கூட்டுறவு சங்கம் வடமுகம் காங்கயம்பாளையத்தில் நடைபெறுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.