உழவர் சந்தை காய்கறிகளை நுகர்வோர் வீடுகளுக்கு டெலிவரி செய்யும் வகையில் உள்ளூர் இணைய வர்த்தகத்துடன் இணைக்கப்படும் புதிய திட்டத்தை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். வேளாண் துறைக்கு மொத்தமாக ரூ.45,661 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், 5 விளை பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கவும் வழிவகை செய்யப்படும் எனவும் அறிவித்துள்ளார். இந்த நிதியாண்டில் வேளாண் துறைக்கு மொத்தமாக ரூ.45,661 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.